Home Featured நாடு உலகின் மிகப் பெரிய விமானம் கேஎல்ஐஏ வந்தடைந்தது!

உலகின் மிகப் பெரிய விமானம் கேஎல்ஐஏ வந்தடைந்தது!

877
0
SHARE
Ad

Antonov AN225 BERNAMA 140516சிப்பாங் – உலகின் மிகப் பெரிய விமானமான அண்டோனோவ் ஏஎன் – 225 மிரியா (Antonov AN-225 Mriya) இன்று காலை 8.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது.

அவ்விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கக் காரணம், எண்ணெய் நிரப்புவது மட்டும் தான் என்று மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் கூட்டுறவு தகவல் தொடர்பு நிர்வாகி நிக் அனிஸ் நிக் சகாரியா முன்பே அறிவித்திருந்தார்.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ராஜிப் காந்தி அனைத்துலக விமானநிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கியது. தற்போது அவ்விமானம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை நோக்கிப் பயணப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

640 டன்கள் எடையும், உலகின் மீக நீளமான, அகலமான விமானமான அண்டோனோவை (Antonov AN-225 Mriya) 6 டர்போ எஞ்சின்கள் இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: நன்றி (The Star)