Home Featured நாடு மயங்கிச் சரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அடுத்தடுத்து 3 சம்பவங்கள்!

மயங்கிச் சரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அடுத்தடுத்து 3 சம்பவங்கள்!

764
0
SHARE
Ad

MP'sகோலாலம்பூர் – ஜெலபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைனுடின் இஸ்மாயிலுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அதிலிருந்த கட்டி அகற்றப்பட்டது.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மதியம் அவர் தனது வீட்டில் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்ததால், உடனடியாக அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவரது மூளையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த இரண்டு மாதங்களில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இது இரண்டாவது சம்பவம் ஆகும்.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனீபா மைடின், அங்கு திடீரென சுயநினைவை இழந்து மயங்கிச் சரிந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் இருந்த இரத்தக் கசிவு நீக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தற்போது வரை அவரது உடல்நிலை குறித்த முழு விபரம் வெளிவரவில்லை.

இதனிடையே,  சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் (படம்), நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயநோய் தாக்கியிருப்பதையும், மூளைக்குச் செல்லும் நரம்புப் பகுதியில் ஏற்பட்ட பலவீனத்தால், இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.