Home Featured தமிழ் நாடு இன்றுடன் தமிழகத்தில் பிரச்சாரங்கள் முடிவு!

இன்றுடன் தமிழகத்தில் பிரச்சாரங்கள் முடிவு!

695
0
SHARE
Ad

karunanidhi-jayalalitha-vijayakanth-anbumani-tamilisai-seeman3-600சென்னை – கடந்த ஒரு மாத்துக்கும் மேலாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதிவரை நடைபெற்றது. கடந்த மே 2-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 16-ஆம் தேதி திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் 6 முனைப் போட்டி நிலவுகிறது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3776 வேட்பாளகள் களத்தில் உள்ளனர்.

#TamilSchoolmychoice

தேர்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் தலைவர்கள் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.