நேற்றுதான் பாமகவின் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருப்பதி, பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இன்றும் ஒரு பாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்துள்ளது பாமகவிற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
“அன்புமணியாகிய நான்…” என தன்னையே முதலமைச்சராகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, பிரச்சாரம் செய்துவரும் அன்புமணிக்கும் தனிப்பட்ட முறையில் இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.
Comments