Home Featured நாடு தெலுக் டத்தோ ஜசெக சட்டமன்ற உறுப்பினர் நீக்கம்! ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார்!

தெலுக் டத்தோ ஜசெக சட்டமன்ற உறுப்பினர் நீக்கம்! ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார்!

780
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தெலுக் டத்தோ சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் லோ சீ ஹெங் (படம்), ஜசெக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான் கோக் வாய் அறிவித்திருந்தார்.

லோ சீ ஹெங் – நீக்கப்பட்ட தெலுக் டத்தோ சட்டமன்ற உறுப்பினர்…

அதனைத் தொடர்ந்து அவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஜசெக தலைவரும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினருமான டோனி புவா அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தெலுக் டத்தோ தொகுதிக்கென சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒதுக்கியிருந்த மேம்பாட்டு நிதியை முறைகேடான முறையில் கையாண்ட காரணத்திற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். ஷா ஆலாமிலுள்ள சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மே 11ஆம் தேதி இந்தப் புகார் செய்யப்பட்டது” என இன்று விடுத்த அறிக்கையொன்றில் டோனி புவா தெரிவித்துள்ளார்.

tony pua featureகட்சியின் அடிப்படைக் கொள்கைகளாகப் பார்க்கப்படும் சிறந்த நிர்வாகம், நேர்மை, முறையாக கணக்குக் காட்டும் தன்மை ஆகிய அம்சங்களில் ஜசெக எந்தக் காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் டோனி புவா (படம்) வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தெலுக் டத்தோ தொகுதியை 5,391 வாக்குகள் வித்தியாசத்தில், தேசிய முன்னணி-மசீச சார்பில் போட்டியிட்ட டான் செங் சாய் என்பவரைத் தோற்கடித்து லோ வெற்றி பெற்றார்.