Home Featured உலகம் இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை!

இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை!

963
0
SHARE
Ad

India_china_borderவாஷிங்டன்  – இந்திய எல்லையின் அருகே சீனா படைக்குவிப்பை அதிகரித்து வருவதாகவும், இது குறித்து எங்கள் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன என கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ துணை அமைச்சர் ஆபிரகாம் டென்மார்க் கூறியுள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘2016-ம் ஆண்டுக்கான சீனாவின் ராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகனில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ துணை அமைச்சர் ஆபிரகாம் டென்மார்க் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “இந்திய எல்லையின் அருகே சீனா படைக்குவிப்பை அதிகரித்து வருகிறது. இது குறித்து எங்கள் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இதன் உண்மையான நோக்கம் என்ன என்று முடிவுக்கு வந்து கூறுவது கடினமான ஒன்று” என்றார்.

#TamilSchoolmychoice

அமெரிக்க ராணுவ அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரின் இந்திய பயணம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், “அது நல்ல பலனை அளித்துள்ளது. இந்தியாவுடன் எங்கள் இரு தரப்பு உறவை மேம்படுத்தப்போகிறோம்.

சீனாவை முன்னிட்டு அல்ல. இந்தியா ஒரு முக்கியமான நாடு என்பதின் அடிப்படையில்தான். இந்தியா மீதான மதிப்பீட்டை புரிந்துகொண்டவர்களாக அந்த நாட்டுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்” என பதில் அளித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது தளங்களில், அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனா படைகளை குவித்துள்ளதாக கூறி, அமெரிக்கா எச்சரித்துள்ளது.