Home Featured தமிழ் நாடு இதுவரை தமிழகத்தில் ரூ.102 கோடி பணம் பறிமுதல் – தேர்தல் அதிகாரி தகவல்!

இதுவரை தமிழகத்தில் ரூ.102 கோடி பணம் பறிமுதல் – தேர்தல் அதிகாரி தகவல்!

629
0
SHARE
Ad

 

950சென்னை – தமிழகம் முழுவதும் நேற்று வரை ரூ.102 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டியில், வாக்காளர்கள் வாக்குச்சாவடி குறித்து புகார் தெரிவிக்கவும், தகவலறியவும் 1950 எண்கிற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.

#TamilSchoolmychoice

காஞ்சிபுரத்தில் வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகம் முழுவதும் நேற்றுவரை ரூ.102 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் பணம் பட்டுவாடா செய்ததாக 101 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.