Home Featured தமிழ் நாடு 3வது பாமக சட்டமன்ற உறுப்பினர் கட்சி தாவினார் – இந்த முறை திமுக பக்கம்!

3வது பாமக சட்டமன்ற உறுப்பினர் கட்சி தாவினார் – இந்த முறை திமுக பக்கம்!

947
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்ற வேட்பாளர்கள் தொடர்ந்து அந்த கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சிகளில் சேர்ந்து வருவது, நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

நாங்குநேரி, கோபிசெட்டிப் பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் பாமக வேட்பாளர்கள், பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இன்று, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் காசி பாண்டியன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பாமகவில் இருந்து விலகி கட்சி மாறிய சட்டமன்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இருவர் அதிமுகவுக்கும், ஒருவர் திமுகவுக்கும் தாவியுள்ளனர்.