Home Featured நாடு இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புகிறார் மகாதீர் – மலாக்கா முதல்வர் கருத்து!

இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புகிறார் மகாதீர் – மலாக்கா முதல்வர் கருத்து!

604
0
SHARE
Ad

datuk-idrisகோலாலம்பூர் – எதிர்வரும் சுங்கை பெசார் மற்றும் கோல கங்சார் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் போட்டியிட நினைப்பதாக மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் அவர் காட்டி வரும் உற்சாகமும், குறிப்பாக தேசிய முன்னணி தோற்க வேண்டுமென அவர் நினைப்பதையும் வைத்துத் தான் இதைக் கூறுவதாகவும் அம்னோ உச்ச மன்ற உறுப்பினருமான இட்ரிஸ் ஹாரோன் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிட அவர் மட்டுமே தகுதியான வேட்பாளர் என்று காட்டிக் கொள்வது போல் தெரிகிறது”

#TamilSchoolmychoice

“அப்படித் தான் நான் பார்க்கிறேன். வாசிக்கிறேன். அவர் வேட்பாளராக வர மிகவும் ஆர்வம் கொண்டிருப்பது போல் தெரிகிறது. காத்திருந்து பார்ப்போம்”

“தேசிய முன்னணியை வீழ்த்த கடுமையாக உழைப்போம் என்று அவர் கூறுவதைப் பார்க்கையில், அவர் வேட்பாளராக வர விரும்புவது போல் தெரிகிறது” என்று சினார் ஹரியானிடம் இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.