Home Featured கலையுலகம் தேர்தல் ஆணையம் கைப்பற்றிய ரூ.102 கோடியை கல்விக்கு செலவிட வேண்டும் – விஷால் அதிரடி!

தேர்தல் ஆணையம் கைப்பற்றிய ரூ.102 கோடியை கல்விக்கு செலவிட வேண்டும் – விஷால் அதிரடி!

561
0
SHARE
Ad

vishalசென்னை – சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூபாய் 102 கோடி பணத்தை கல்விக்கு பயன்படுத்த, கொடுக்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னையில் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் தங்களது வாக்கினை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷால் “அடுத்த 5 வருடங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்லா மக்களும் வெளியே வந்து ஒட்டுப் போட வேண்டும்.

#TamilSchoolmychoice

ஒன்றரைக் கோடி புதிய வாக்காளர்கள் இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இந்த வருடம் வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும். அது தான் என்னுடைய நோக்கம்.

தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நன்றி. இத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த பணத்தை மீண்டும் மக்களுக்கே அதுவும் கல்விக்காக பயன்படுத்த கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

நாம் கட்டும் வரி பணம் தவறாக பயன்படுத்துவது வயிற்றெரிச்சலாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதை விரைவில் ஆட்சி அமைக்கும் கட்சி நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்களை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என்று தெரிவித்தார் விஷால்.