Home Featured நாடு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்எம்ஏஎப் விமானம் விழுந்து நொறுங்கியது!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்எம்ஏஎப் விமானம் விழுந்து நொறுங்கியது!

580
0
SHARE
Ad

RMAFகுவாந்தான் – மலேசிய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று இரண்டு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பெகான் பகாங்கிலுள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானிகளும் லேசான காயங்களுடன் விமானத்தில் இருந்து வெளியேறினர்.

இன்று செவ்வாய்கிழமை மதியம் 12.54 மணிக்கு, பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவ்விமானம் ( Aermacchi MB339) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாக மலேசிய விமானப்படை (ஆர்எம்ஏஎப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.