Home கலை உலகம் அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது

அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது

622
0
SHARE
Ad

arjun

சென்னை, மார்ச்.18- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

‘பிரசாத்’ என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தை இளையராஜா இசையமைக்க, மனோஜ் சதி இயக்கியிருந்தார். மாதுரி பட்டாச்சார்யா கதாநாயகியாக நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்போது, கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், “கன்னடத்தில் எனக்கு கிடைத்த முதல் விருது இது. தமிழில் ஏற்கெனவே விருது வாங்கிய என்னை கன்னட திரையுலகும் கௌரவப்படுத்தியது பெருமையான விஷயம்.” இவ்வாறு அவர் கூறினார்.