Home Featured இந்தியா புதுச்சேரி துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி நியமனம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி நியமனம்!

753
0
SHARE
Ad

KiranBediபுதுச்சேரி – முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், திஹார் சிறைச்சாலையின் முன்னாள் தலைமை கண்காணிப்பாளருமான கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கான துணைநிலை ஆளுநராக (கவர்னராக) இந்திய அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புதுடில்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கிரண்பேடி நிறுத்தப்பட்டிருந்தார். எனினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார். அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி முதலமைச்சராக பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

காவல் துறையின் குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் ஒருவராகப் பரிணமித்த கிரண்பேடி, அப்போது, புதுடில்லியிலுள்ள திஹார் சிறைச்சாலையின் தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, சிறைச்சாலை நடைமுறைகளில் பல புதுமைகளையும், புரட்சிகளையும் செய்தார். அதன் காரணமாக வெளிச்சத்திற்கு வந்தார்.

#TamilSchoolmychoice

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பாஜகவில் இணைந்தார்.