கோலாலம்பூர் – மரபின் மைந்தன் முத்தையா (படம்) என்பது தமிழகத்தின் இலக்கிய வட்டங்களிலும், உலகம் எங்கும் உள்ள தமிழ்க் கவிஞர்களிடத்திலும் நன்கு அறிமுகமான பெயர்.
முத்தையா ‘நமது நம்பிக்கை’ இதழின் ஆசிரியர் என்பதோடு, சிறந்த கவிஞருமாவார். கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நெருக்கமான கவிஞர் வட்டாரத்தில் முக்கியமானவரான முத்தையா, சிறந்த பேச்சாளர் என்பதோடு, கண்ணதாசனின் கவிதை மீது தீராத காதல் கொண்டு, அவரது கவிதைகளின் மேன்மைகளைப் பற்றி நிறைய மேடைப் பேச்சுகளை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முத்தையா எழுதிய ‘இணைவெளி’ என்ற கவிதை நூலும் வெளியிடப்படும். இது முத்தையா எழுதி வெளியிடும் 60வது நூலாகும்.
தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிகின்றார்.
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புக் குழுத் தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்குவர்.