Home Featured உலகம் 50 ஆண்டுகாலம் நீடித்திருந்த வியட்னாம் மீதான ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா நீக்கியது!

50 ஆண்டுகாலம் நீடித்திருந்த வியட்னாம் மீதான ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா நீக்கியது!

749
0
SHARE
Ad

obamaஹானோய் – தனது பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு முன்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகின்றார். அமெரிக்காவின் வியட்னாம் போர் வரலாற்றுப் பக்கங்களில் மறக்க முடியாத ஓர் அங்கமாகும்.

அதன் காரணமாக, வியட்னாம் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வந்த ஆயுதக் கட்டுப்பாட்டை தற்போது ஒபாமாவின் அமெரிக்க அரசாங்கம் நீக்கியுள்ளது.

வியட்னாமுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதில்லை என்ற கட்டுப்பாட்டை அமெரிக்கா நீக்கியுள்ளதன் மூலம், இனி தனது தற்காப்புக்காகத் தேவைப்படும் ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வியட்னாம் வாங்கிக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

வியட்னாமுக்கு வரலாற்றுபூர்வ வருகையை ஒபாமா மேற்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.