Home Featured இந்தியா வெயிலினால் தெலுங்கானாவில் இதுவரை 415 பேர் ‌பலி!

வெயிலினால் தெலுங்கானாவில் இதுவரை 415 பேர் ‌பலி!

749
0
SHARE
Ad

heatsummerஐதராபாத் – தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் தொடர்பான சம்பவங்களில் 415 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.

தெலுங்கான மாநிலத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது வெயிலின் கோர தாண்டவத்துக்கு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன.  சில பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால், பல மாவட்டங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுட்டெரித்த வெயிலின் தாக்கத்திற்கு தெலுங்கானா மாநிலம் முழுவதும் 415 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 141 பேர் மரணமடைந்ததா‌க‌ ‌ கூற‌ப்பட்டிருக்கிறது.‌‌ வெயில் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் பற்றிக் கண்டறிய அமைக்கப்பட்ட மூவர் கமிட்டி குழு இதனை உறுதிசெய்துள்ளது.

அதிகப்பட்சமாக ராமகுண்டம் பகுதியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தெலுங்கானாவில் தற்போது சராசரியாக 44 டிகிரி வெயில் இருந்து வருகிறது.

2015-ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது கடும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 486 பேர் உயிரிழந்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.