Home Featured உலகம் திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்கு ரயில் பாதை அமைக்க சீனா விருப்பம்!

திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்கு ரயில் பாதை அமைக்க சீனா விருப்பம்!

998
0
SHARE
Ad

india_china_map_20121022பெய்ஜிங் – நேபாளத்தில் ரயில் பாதை அமைத்து வரும் சீன அரசு, அந்த ரயில் பாதையை இந்தியாவின்  பீகார் மாநிலம் வரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதன்படி திபெத்திலிருந்து நேபாளத்தின் ரசுவாகதி வரை ரயில் பாதை அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ள நிலையில் இந்த ரயில்பாதையை நேபாள எல்லையில் உள்ள பீகாரின் பிர்குஞ்ச் வரை நீட்டிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பாதை சாத்தியமாகும் பட்சத்தில் பீகார் மாநிலத்திலிருந்து கொல்கத்தா வழியாக சீனாவுக்கு வர்த்தகம் செய்வதை விட எளிதானது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இந்த திட்டத்தின் மூலம் தெற்காசிய நாடுகளுடன் சுமுகமான வர்த்தக உறவை மேற்கொள்ள முடியும் என்று சீன அரசு நம்புவதாக அந்த செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு அமைக்கவுள்ள இந்த ரயில் பாதை 2020-ஆம் ஆண்டு முடிவடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.