Home Featured நாடு 1எம்டிபி நிர்வாகத்திலோ, கணக்குகளிலோ முறைகேடுகள் நடக்கவில்லை – நஜிப் கூறுகின்றார்!

1எம்டிபி நிர்வாகத்திலோ, கணக்குகளிலோ முறைகேடுகள் நடக்கவில்லை – நஜிப் கூறுகின்றார்!

646
0
SHARE
Ad

najib1கோலாலம்பூர் – 1எம்டிபி கணக்குகளிலோ, நிர்வாகத்திலோ எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

பிஏசி அறிக்கைக்குப் பிறகு 1எம்டிபி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று போக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஹ்பஸ் ஓமார் எழுப்பிய கேள்விக்கு நஜிப் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும், பொதுக்கணக்குக் குழு (Public Accounts Committee) அறிக்கையை மேற்கோள் காட்டிய நஜிப் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில், “1எம்டிபி கணக்குகள் மற்றும் நிர்வாகத்தில் எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று பிஏசி கூறுகின்றது. நிறுவனத்தின் நிர்வாகத்தில் சில பலவீனங்கள் மட்டுமே உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice