Home Featured தமிழ் நாடு ‘ஸ்மார்ட் சிட்டி’ போட்டி: அதிகாரிகளின் மெத்தனத்தால் தமிழகத்திற்கு இடமில்லை!

‘ஸ்மார்ட் சிட்டி’ போட்டி: அதிகாரிகளின் மெத்தனத்தால் தமிழகத்திற்கு இடமில்லை!

616
0
SHARE
Ad

chennai-cityபுதுடெல்லி – ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை.  இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள் உட்பட, நாடு முழுவதும், 98 நகரங்களை மத்திய அரசு,’ ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு தேர்வு செய்தது. விரைவாக திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதல், 20 நகரங்களின் பட்டியல் ஜன., 28-இல் வெளியிடப்பட்டது.

சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள் இதில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. அடுத்த, 13 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு, நேற்று வெளியிட்டது. இதில், ஒரு இடத்தை கூட தமிழக நகரங்கள் பெறவில்லை.

#TamilSchoolmychoice

முதல் பட்டியலில் பின் தங்கியதற்கு, மழை வெள்ளம் பாதிப்பை காரணமாக கூறிய தமிழக அதிகாரிகள், தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததை காரணமாக கூறுகின்றனர்.

2015 ஜூன் மாதம், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மத்திய அரசே, இதற்கான கலந்தாலோசனை நிறுவனங்களை பரிந்துரைத்தும், தமிழக நகரங்களின் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முழு காரணமாககூறப்படுகிறது. முதல்கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.