Home Featured தமிழ் நாடு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

994
0
SHARE
Ad

SRB-Vaithilingam.

(எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்- வைத்திலிங்கம்)

சென்னை – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் பலவேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கபட்டு இருந்த உறுப்பினர்களில் 57 பேரின் பதவிக் காலம் முடிவடைந்தது.

15 மாநிலங்களில் இருந்து மட்டும் 55 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆனந்த் சர்மா மற்றும் விஜய் மல்லையா இருவரின் இடங்களும் காலியாகியுள்ளது.

தமிழகத்தில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் மற்றும் திமுகவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, காங்கிரசில் இருந்து சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைந்தது.

இந்த காலி இடங்களுக்கு வரும் ஜூன் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

nava

(நவநீத கிருஷ்ணன்)

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நவநீத கிருஷ்ணன், 2016- தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டுயிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வைத்திலிங்கம், தா.மா.கா.வில் இருந்து விலகி சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்,

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் விஜயகுமார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார்கள் என அ.தி.மு.க. தலைமை நிலையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.