Home Featured நாடு கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!

கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!

683
0
SHARE
Ad

Anwar ibrahimகோலாலம்பூர் – சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து அன்வாரின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் கூறுகையில், “வழக்கறிஞர்கள் கூட அவரைப் பார்ப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எனது தந்தையிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவும், ஆவணங்களில் கையெழுத்து பெறவும் அவர்களுக்கு வாரத்தில் ஒருமுறை, அதுவும் ஒரு மணி நேரமே அவகாசம் வழங்கப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம் கசிந்தது குறித்து, சிறை நிர்வாகம் உள்விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், நீதிமன்றத்திற்கு அன்வார் அழைத்து வரப்படும் போது, அவரை கடும் சோதனைகள் செய்த பின்னரே அதிகாரிகள் அனுமதிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.