Home Featured உலகம் 4-வயது சிறுவனை மீட்க கொரில்லாவை சுட்ட அதிகாரிகள்! (காணொளியுடன்)

4-வயது சிறுவனை மீட்க கொரில்லாவை சுட்ட அதிகாரிகள்! (காணொளியுடன்)

578
0
SHARE
Ad

4-year-old-boy-gorillaநியூயார்க் – அமெரிக்காவின் உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவின் இருப்பிடத்திற்குள் நுழைந்த 4-வயது சிறுவனை காப்பாற்ற பூங்கா ஊழியர் கொரில்லாவை சுட்டு கொன்றனர்.

உயிருக்கு ஆபத்தான சூழலாக கருதப்பட்டமையால் அந்த 180 கிலோ எடையுள்ள கொரில்லா கொல்லப்பட்டதாக உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சின்சினாட்டி உயிரியல் பூங்காவின் இயக்குனர் தானெ மெய்நார்ட் கூறுகையில், அந்த நான்கு வயது சிறுவன் தடுப்பு வேலியை தாண்டி விழுந்துவிட்டான் எனவும், அச்சிறுவனை ஹரம்பே என்ற அந்த கொரில்லா பிடித்து தன் பக்கமாக இழுத்துக்கொண்டது என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த அரியவகை கொரில்லாவை கொன்றது மிகவும் துயரத்திற்குரிய செயல் என்று தெரிவித்த அவர், கொரில்லாவை சுடவேண்டும், என்று எடுக்கப்பட்ட இந்த முடிவு கடினமாதாக இருந்தாலும் அது ஒரு சரியான முடிவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரில்லாவின் இருப்பிடத்தில் விழுந்த அச்சிறுவனை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு அவனை பார்த்துக்கொண்டிருந்தது அந்த கொரில்லா.

இந்த சம்பவத்தில் அதே இருப்பிடத்தில் இருந்த இரு பெண், மீட்கப்பட்ட அச்சிறுவனுக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

https://youtu.be/iAu1IRrZCW4