Home Featured நாடு வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் – அமைச்சர்களுக்கு அனுவார் மூசா வலியுறுத்து!

வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் – அமைச்சர்களுக்கு அனுவார் மூசா வலியுறுத்து!

773
0
SHARE
Ad

Annuar Musa Mara Chairmanகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு, என்னவோ வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் என பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்த தேசிய முன்னணித் தலைவர்களுக்கு அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.

“(மசோதாவில்) என்னவெல்லாம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ அந்தத் திருத்தங்கள் சட்டம் 355 -ஐச் சேர்ந்தது. ஹூடுட் பற்றியது அல்ல” என்று அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஹூடுட்  மசோதாவிற்கு முன்னுரிமை வழங்வது குறித்து பாரிசான், தனது கூட்டணிக் கட்சிகளிடத்தில் கலந்தாலோசிக்காமலேயே முடிவெடுத்திருப்பதாக அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடந்த வாரம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய், மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவோம் என எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.