Home Featured கலையுலகம் கங்கையில் வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணி தீவிரம் – 5 படகுகள் அமர்த்தப்பட்டுள்ளன!

கங்கையில் வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணி தீவிரம் – 5 படகுகள் அமர்த்தப்பட்டுள்ளன!

723
0
SHARE
Ad

vendhar-movies-s-madhanசென்னை – ‘கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் அதிபர் எஸ். மதனை தேட காசியில், 5 படகுகளை அமர்த்தியுள்ளனர் காவல்துறையினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நட்பு ஊடகங்களில் மதன் எழுதியதாக கடிதம் ஒன்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

அக்கடிதத்தின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக மதன் தனது குடும்பத்திதினருடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

தற்போது வாரணாசியில் மதனின் நெருங்கிய உறவினர்கள் சிலர், தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் அங்கு தங்கியிருந்த தங்கும்விடுதியையும் கண்டறிந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.