Home Featured தமிழ் நாடு மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

789
0
SHARE
Ad

parlimentபுதுடெல்லி  – தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 சுயேட்சைகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதனால் 4 அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இவற்றில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.பாரதி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மே 26-ஆம் தேதியும், அதிமுக வேட்பாளர்கள் மே 27 -ஆம் தேதியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மே 31) முடிவடைந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தின் சார்பில் 13 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

அதிமுக 4 பேர், திமுக 2 பேர் தவிர 7 சுயேட்சைகள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று ( ஜூன் 1) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும் என்பது விதி.

அதன்படி சுயேட்சை வேட்பாளர் 7 பேருக்கும் எந்த எம்.எல்.ஏ.,வும் முன்மொழியாததால், அவர்கள் 7 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  இதனால் அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும், திமுக வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாநிலங்களவைவில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர உள்ளது. லோக்சபாவை தொடர்ந்து மாநிலங்களவையிலும் அதிமுக.,வின் பலம் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.