Home Featured கலையுலகம் காலத்தால் அழியாத பேரழகி மர்லின் மன்ரோவுக்கு 90 வயது!

காலத்தால் அழியாத பேரழகி மர்லின் மன்ரோவுக்கு 90 வயது!

1066
0
SHARE
Ad

ஹாலிவுட் – ஆங்கில சினிமா உலகின் வரலாற்றில் எத்தனையோ பேரழகிகள் வண்ணத் திரைகளில் உலா வந்து, இரசிகர்களைக் கிறங்கடித்திருக்கின்றனர். எத்தனை பேர் கடந்து போனாலும், இன்றுவரை உலகம் எங்கும் உள்ள அந்தக் கால இரசிகர்களும், இன்றைய இளைய தலைமுறையினரும் கூட மறக்காத பெயர், கேட்டவுடன் மயங்கி நிற்கும் பெயர் – மர்லின் மன்றோ.

மர்மமான முறையில் தனது 36வது வயதிலேயே இறந்து கிடக்கக் காணப்பட்ட மர்லின் மன்றோ மரணம் குறித்த மர்மங்கள் இன்றுவரை, தகவல் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. “எப்படி இறந்திருப்பார்?” எனக் கேள்விக் கேட்டு தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளும் இரசிகர்களின் சந்தேகப் பசிக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன.

மர்லின் மன்றோவின் மறக்க முடியாத, காலத்தால் அழியாத, படக் காட்சிகளில், அவரைப் பற்றிய சில சுவாரசிய தகவல்களோடு, ஒருமுறை உலா வருவோமா?

#TamilSchoolmychoice

Marilyn Monroe

1926ஆம் ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி பிறந்த மர்லின் மன்றோவின் இயற்பெயர் நோர்மா ஜீன் மோர்ட்டின்சன் (Norma Jeane Mortenson). ஆனால் ஹாலிவுட் படவுலகம் அவரை அரவணைத்துக் கொண்டது மர்லின் மன்றோ என்ற பெயரோடுதான்.

Marilyn Monroe-1

கறுப்பு வெள்ளை காலத்துப் பேரழகியான மர்லின் மன்றோ, பல பிரமுகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி இருவரோடும் கிசுகிசுக்கப்பட்டவர் மர்லின். அவரது மரணத்துக்குப் பின்னணியில் கென்னடி குடும்பத்திற்கும் சம்பந்தமுண்டு என இன்றுவரை வாதிடுபவர்களும் உண்டு.

Marilyn Monroe-21962ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது 36வது வயதில் மர்லின் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கு இரண்டு படங்களுக்கான ஒப்பந்தத்தில் ஃபோக்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டது. அதற்காக அவருக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் – அதாவது 1962ஆம் ஆண்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்!!Marilyn Monroe-7இறக்கும்போது, படத்தில் நடிப்பதற்கு 1 மில்லியன் டாலர் டாலர் பெற்றாலும், மர்லின் நடிக்க ஆரம்பித்தபோது மிகக் குறைந்த சம்பளமே பெற்றார். அவருடன் நடித்த நடிகர்களைவிட அவருக்குக் குறைவான சம்பளமே தரப்பட்டது. ஆனால் “யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பொன்மொழி, பொன்னிற மர்லின் மன்றோவுக்கும் பொருந்தும். அவர் இறந்து விட்டாலும், அவரது சொத்து அறக்கட்டளைக்கு இப்போதும் அவரது பதிப்புரிமைகள் மூலம் ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது.

Marilyn Monroe -3காலத்தால் அழியாத – மறக்கப்படாத புகைப்படம் இது! இந்தத் தோற்றத்தில் மர்லினின் முகத்தை எடுத்துவிட்டு யாரிடம் காட்டினாலும் இது மர்லின் மன்றோ புகைப்படமாயிற்றே என்று கூறிவிடுவார்கள். அந்த அளவுக்கு காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் புகைப்படம் இது!Marilyn Monroe -4மர்லின் மன்றோவின் கவர்ச்சிகரமான உடலமைப்பின் அபாயகரமான வளைவுகள் உலகப் புகழ் பெற்றவை. பலரும் அந்த இரசனையில் மயங்கிக் கிடந்தனர். அத்தகைய அவரது உடலழகை எடுத்துக்காட்டும் புகைப்படங்களுள் ஒன்று…Marilyn Monroe -5இது சேனல் 5 என்ற வாசனைத் திரவியத்திற்காக மர்லின் நடித்த விளம்பரப் படம். நிர்வாணப் படங்களுக்குப் புகழ் பெற்ற ‘பிளேபோய்’ என்ற மாத இதழில் 19563இல் வெளியான மர்லின் மன்றோவின் நிர்வாணப் படம் இன்றும் பேசப்படுகின்றது. ஆனால் என்ன செய்வது? வெளியிட முடியாது! அந்தப் படத்திற்காக 1949இல் மர்லின் மன்ரோ புகைப்படக்காரரின் முன்னால் நிர்வாணமாக நின்றபோது அவருக்கு வழங்கப்பட்ட தொகை வெறும் 50 டாலர்தான். ஆனால் பின்னர் பிளேபோய் பத்திரிக்கையின் நிறுவனர் ஹியூ ஹெஃப்னெர் அந்த நிர்வாணப் படத்தை 500 டாலர் கொடுத்து வாங்கினார்.Marilyn Monroe -6மர்லின் மன்ரோ உடல் புதைக்கப்பட்டிருக்கும் மயானத்தில் அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மயான இடங்களை சிலர் வாங்கி வைத்திருக்கின்றார்கள். அவ்வாறு மர்லின் மன்றோ புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்தை அதன் உரிமையாளர் இணையம் வழி ஏலம் விட்டபோது பலர் இலட்சக்கணக்கான டாலர் கொடுத்து அந்த இடத்தை வாங்க முன்வந்தார்கள். ஒருவர் 2.8 மில்லியன் பவுண்ட் (ஏறத்தாழ மலேசிய ரிங்கிட் 16.8 மில்லியன்) வரை தர முன்வந்தார். மர்லின் மன்ரோ புதைக்கப்பட்ட மயான இடத்திற்கு அடுத்துள்ள இடத்தை வாங்கியிருப்பவர் பிளேபோய் பத்திரிக்கை நிறுவனர் ஹியூ ஹெஃப்னெர். அதற்காக அவர் 1992இல் செலுத்திய தொகை 50,000 அமெரிக்க டாலர்.

Marilyn Monroe - 7மர்லின் மன்ரோவின் சொத்துடமைகளை நிர்வகிக்கும் உரிமைகளை 2011ஆம் ஆண்டில் அத்தெண்டிக் பிராண்ட் குரூப் நிறுவனம் 30 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும், 1962ஆம் ஆண்டில் இறந்த மர்லின் இன்றைக்கும் மில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருக்கின்றார். எதிர்காலத்திலும் பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1999ஆம் ஆண்டில் – அதாவது அவர் இறந்து 37 ஆண்டுகள் கழித்து அவரது பியானோ ஒன்று 662,500 டாலருக்கு ஏலத்தில் விலைபோனது. அதை வாங்கியது இன்று உலகப் பெற்ற பாடகியான மரியா கேரி என்ற பாடகி. இந்த பியானோவை மர்லினின் தாயார் முதலில் வாங்கி பின்னர் விற்றுவிட்டார். மர்லின் அதே பியானோவைத் திரும்பவும் தேடிப் பிடித்து வாங்கி, தான் இறக்கும் வரையில் தன்னுடன் வைத்திருந்தார்.

மர்லின் மறைந்து 44 ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவரைப் பற்றிய இதுபோன்ற ஏராளமான சுவாரசியத் தகவல்கள் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவரது அழகை ஆராதிக்கும் இரசிகர்களால் இன்றும் ஆர்வத்துடன் படிக்கப்பட்டு வருகின்றன.

உங்களையும் சேர்த்துத்தான்!

-செல்லியல் தொகுப்பு