Home Featured நாடு பிரிட்டிஷ் காமுகன்: மலேசியாவில் இந்தியக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

பிரிட்டிஷ் காமுகன்: மலேசியாவில் இந்தியக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

554
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று இலண்டனில் இளம் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்காக நீண்ட கால ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட காமுகன் ரிச்சர்ட் ஹக்கல் என்பவனின் தகாத செயல்களால் நிறைய இந்தியக் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Richard Huckleவறுமையிலும், பின்தங்கிய நிலையிலும் இருக்கும் கிறிஸ்துவக் குடும்பங்களைக் குறிவைத்து ஹக்கல் பழகியிருக்கின்றான் என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நேற்று ஸ்டார் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, பெட்டாலிங் ஜெயா தாமான் துன் இஸ்மாயில் பகுதியிலுள்ள புக்கிட் கியாரா நீண்ட வீடுகள் குடியிருப்பில் ஹக்கல் அடிக்கடி வந்து போனதாகவும், அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும் அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.சுந்தரம் தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

ஹக்கல் இங்கு வந்து நட்புறவுடன் பழகியதோடு, அடிக்கடி ஒரு சிலரது வீடுகளிலும் தங்கியிருக்கின்றான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பிரிட்டிஷ் காவல் துறை அதிகாரியின் வருகை

கடந்த ஏப்ரல் மாதத்தில் புக்கிட் கியாரா நீண்ட வீடுகள் பகுதிக்கு வந்த பிரிட்டிஷ் காவல் துறை அதிகாரி ஒருவர், அங்குள்ளவர்களைப் பார்த்து “பயப்படாதீர்கள்! ஹக்கல் இனிமேல் வரமாட்டான். அவன் சிறையை விட்டு வெளியே வராதவாறு பார்த்துக் கொள்கின்றோம்” என்று கூறியிருக்கின்றார். அப்போது கூட இங்குள்ள குடியிருப்பாளர்கள் இதனை இத்தனை பெரிய விவகாரமாகக் கருதவில்லை.

ஆனால், இப்போது பார்க்கும் போது, ஹக்கலால் விளைந்த கொடுமைகளை பத்திரிக்கைகளில் படிக்கும் போது அவர்கள் அதிர்ச்சியால் உறைந்து விட்டனர்.

புக்கிட் கியாரா நீண்ட வீடுகள்

புக்கிட் கியாரா நீண்ட வீடுகளில் இருப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே இந்தியர்கள். சுமார் 34 வருடங்களுக்கு முன்னர் கியாரா எஸ்டேட் என்ற தோட்டம் மேம்படுத்தப்பட்டு, தாமான் துன் இஸ்மாயில் போன்ற நகர்ப்புற வீடமைப்புகள் உருவாக்கப்பட்டபோது, அங்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக நீண்ட வரிசை வீடுகள் தற்காலிகமாகக் கட்டிக் கொடுக்கப்பட்டன.

பின்னர் நிரந்தர வீடுகள் வழங்கப்படும் என உறுதி தரப்பட்டாலும் கால ஓட்டத்தில் 34 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் அந்த இந்தியக் குடும்பங்கள் அங்குதான் வாழ்ந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இந்தியக் குழந்தைகள் ரிச்சர்டின் செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

ஹக்கலின் வழக்கை விசாரித்த இலண்டன் நீதிமன்றம் அவனுக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவன்மீது 71 குற்றங்கள் சுமத்தப்பட்டு, அதற்காக மொத்தம் 22 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.