Home Featured நாடு ஹக்கிலிடம் விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது மலேசியக் காவல்துறை!

ஹக்கிலிடம் விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது மலேசியக் காவல்துறை!

610
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – மலேசியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறியும் நோக்கில் பிரிட்டன் சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கிலிடம் காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை பெறவுள்ளது.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் விடுத்துள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் (பிரிட்டனில்) விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

எனவே, பாதிக்கப்பட்ட மலேசியச் சிறார்கள் குறித்து சிறையில் இருக்கும் ஹக்கிலிடம் விசாரணை நடத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அந்த விண்ணப்பம் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி வைக்கப்படும். என்றாலும் மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார்களை அளிக்க வேண்டும” என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.