Home Featured உலகம் மடகாஸ்கார் தீவில் விமானத்தின் புதிய சிதைவுகள்! எம்எச் 370 பாகமாக இருக்கலாம்!

மடகாஸ்கார் தீவில் விமானத்தின் புதிய சிதைவுகள்! எம்எச் 370 பாகமாக இருக்கலாம்!

632
0
SHARE
Ad

மடகாஸ்கார் – காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படும் பொருட்கள் நேற்று ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில்.

ஆப்பிரிக்கா அருகிலுள்ள மடகாஸ்கார் தீவுப் பகுதியில் மேலும் சில புதிய விமான சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

MH 370-blaine alan gibson-madagaskarமடகாஸ்கார் தீவில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகளுடன் பிளேய்ன் கிப்சன் (படம்: நன்றி – பிபிசி இணையத் தளம்)

#TamilSchoolmychoice

பிளேய்ன் கிப்சன் என்பவர் எம்எச் 370 விமானத்தின் உடைந்த பாகங்களைத் தொடர்ந்து தேடி வருபவராவார். இவர் தற்போது மடகாஸ்கார் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் எம்எச் 370 விமானத்தின் சிதைவுகள் என நம்பப்படும் சில பொருட்களைக் கண்டெடுத்துள்ளார்.

பிளேய்ன் கிப்சன் மொசாம்பிக் நாட்டிலும் சில விமான சிதைவுகளைக் கண்டெடுத்து ஒப்படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிதைவு ஒரு விமானத்தின் இருக்கை போல் தெரிகின்றது. எம்எச் 370 விமானம் குறித்த புலனாய்வு அதிகாரிகளிடம் தான் கண்டெடுத்த பொருட்களின் புகைப்படங்களை அவர் அனுப்பி வைத்திருக்கின்றார்.