Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற்றார்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற்றார்!

592
0
SHARE
Ad

hilary-clintonவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்காக போதுமான வாக்குகளைப் பெற்றுவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார். ஏற்கனவே, டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெற்றுள்ள நிலையில், இனி இருவருக்கும் இடையில் அடுத்த அதிபர் யார் என்பதற்கான அதிகாரபூர்வ போட்டி தொடங்குகின்றது.