Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு தீர்ப்பு விரைவில்! தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு தீர்ப்பு விரைவில்! தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

499
0
SHARE
Ad

சென்னை – புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் 4 பேர் மீதான சொத்து வழக்கு மீதான தீர்ப்பு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் அடுத்த கட்ட பரபரப்புக்கு நகர்ந்துள்ளது.

பெங்களூரு நீதிமன்றத்தால், ஜெயலலிதாவும் மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நிறைவடைந்தது.

jayalalithaa

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

தங்களின் இறுதிக் கட்ட வாதங்களை சுருக்கமாக, எழுத்துவடிவில் எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீதான தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

ஜெயலலிதா விடுதலை என்றால், எந்தவித பிரச்சனையும் இன்றி அவர் முதல்வராகத் தொடர்வார். அப்படியே அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் முதல்வராகத் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அந்த புதிய முதல்வர் வழக்கம்போல் ஓ.பன்னீர் செல்வமாக இருக்கலாம்.

இதற்கிடையில், தனது சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்ட வழிகளில் தனது நீதிமன்றப் போராட்டத்தை ஜெயலலிதா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.