சிங்கப்பூர் – அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சிங்கப்பூர் அரசுப் பணியாளர்களின் கணினிகளில் இருக்கும் இணைய வசதி நிறுத்திக் கொள்ளப்படவுள்ளது.
அரசாங்க முகமைகள், அமைச்சரவை மற்றும் சட்ட வாரியங்கள் உள்ளிட்டவைகளில் இருந்த வந்த இணையம் நிறுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தி ஸ்டெரெயிட் டைம்ஸ் கூறுகின்றது.
இதன் மூலமாக சிங்கப்பூரில் பொதுச் சேவைகளில் ஈடுபட்டுள்ள 100,000 கணினிகள் இணைய சேவை வசதியை இழக்கின்றன.
“எங்களுடைய நெட்வொர்க்கை மேலும் பாதுகாப்பாக ஆக்கத் தேவையான அனைத்து பராமரிப்புகளையும் தொடர்ந்து செய்து வருகின்றோம்” என்று சிங்கப்பூர் இன்போகாம் மேம்பாட்டு அதிகார மையம் சார்பில் நேற்று அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க ஆவணங்கள், மின்னனஞ்சல்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் கசிந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற விழிப்புணர்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுடுள்ளதாகக் கூறப்படுகின்றது.