பாரிஸ் – நேற்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண ஆட்டத்தில் உக்ரேன் நாட்டை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டதன் வாயிலாக, தனது வெற்றிப் பயணத்தை இந்த ஐரோப்பியக் கிண்ணத் தொடரிலும் தொடக்கியிருக்கின்றது ஜெர்மனி.
கடந்த கால ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு போட்டியிலும், குறைந்த பட்சம் அரை இறுதி ஆட்டம் வரை வந்து விடும் அல்லது வெற்றிக் கிண்ணத்தை வென்றுவிடும் பாரம்பரியத்தை ஜெர்மனி காற்பந்து குழு கொண்டிருக்கின்றது.
முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மன் ஆட்டக்காரர் கோட்ரன் முஸ்தாபி பந்தைத் தலையால் முட்டி கோலாக்கி தனது குழுவை முன்னணிக்குக் கொண்டு வந்தார். ஆட்டம் முடியும் நேரத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் இரண்டாவது கோலைப் போட்டு ஜெர்மனியின் வெற்றியை உறுதி செய்தார் பாஸ்டியன் ஸ்வென்ஸ்டெய்கர்.
இனி அடுத்து ஜூன் 16இல் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி போலந்தைச் சந்திக்கும்.
உக்ரேன் ஆட்டக்காகாரருக்கு எதிராக பந்துடன் முன்னேறிச் செல்லும் ஜெர்மனி ஆட்டக்காரர் சாமி கெடிரா