Home Featured உலகம் யூரோ 2016: புதன்கிழமை ஆட்டங்கள்! மீண்டும் ரஷியா விளையாடுகிறது!

யூரோ 2016: புதன்கிழமை ஆட்டங்கள்! மீண்டும் ரஷியா விளையாடுகிறது!

672
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் வரிசையில் இன்று புதன்கிழமை மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் அட்டவணைப்படி ரஷியா-சுலோவாக்கியாவுடன் மோதுகிறது. நேற்று ஐரோப்பிய காற்பந்து ஒன்றியம், ரஷியா மீதான தடை குறித்து விடுத்துள்ள அறிவிப்பில், ரஷியாவுக்கு 119,000 பிரிட்டிஷ் பவுண்ட் அபராதம் விதித்துள்ளதோடு, மீண்டும் ஒருமுறை ரஷிய காற்பந்து இரசிகர்கள் அரங்கில் மோசமாக நடந்து கொண்டு கலவரம் செய்தால், அந்நாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் ரஷியா மீண்டும் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தனது காற்பந்து இரசிகர்களின் அட்டகாசத்தால் ரஷியா இந்தத் தடையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கின்றது.

இன்றைய ஆட்டங்கள் பின்வருமாறு:

மலேசிய நேரப்படி

‘பி’ பிரிவு

ரஷியா-சுலோவாக்கியா (இரவு 9.00 மணி)

‘ஏ’ பிரிவு

ரொமானியா – சுவிட்சர்லாந்து (இரவு 11.55 மணி)

பிரான்ஸ் – அல்பானியா (வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணி) euro-15 june-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம், பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு நேரமாகும்.