Home Featured கலையுலகம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ‘மயங்காதே’ – கூடுதல் திரையரங்குகளுடன்!

வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ‘மயங்காதே’ – கூடுதல் திரையரங்குகளுடன்!

743
0
SHARE
Ad

Mayangaatheyகோலாலம்பூர் – சிகே, ஷைலா நாயர் நடிப்பில், காதல், திகில், நகைச்சுவை என அத்தனை அம்சங்களையும் கொண்ட கலகலப்பான திரைப்படமான ‘மயங்காதே’ இன்று வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த வாரம் வியாழக்கிழமை நாடெங்கிலும் 30 திரையரங்குகளில் வெளியான மயங்காதே, ரசிகர்களின் அதிகமான வருகை காரணமாகத் தற்போது கூடுதலாக 6 திரையரங்குகளுடன் இன்று முதல் திரையிடப்படவுள்ளது.

Mayangaatheyபடத்தில் இடம்பெற்றுள்ள கே.கே.கானா, ஷாம், சுரேஸ், அகிலா கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகளும்,  சிகே, ஆர்த்தி இடையிலான தந்தை, மகள் பாசப் போராட்டங்களும், பாடல்களும் பெரிதும் ஈர்ப்பதாக படம் பார்த்த பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice