Home Featured நாடு பில் காயோங் கொலையை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுங்கள் – காவல்துறை அறிவிப்பு!

பில் காயோங் கொலையை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுங்கள் – காவல்துறை அறிவிப்பு!

828
0
SHARE
Ad

Bill kayong murderகோலாலம்பூர் – இன்று காலை மிரி நகரின் லூத்தோங் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்கு அருகே மர்ம நபரால் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பில் காயோங் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காலை 8.30 மணியளவில் நடந்துள்ள இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? என காவல்துறை ஆய்வு செய்து வருகின்றது.

இது குறித்து மாநில சிஐடி தலைவர் எஸ்ஏசி தேவ் குமார் கூறுகையில், “கொலை செய்யப்பட்டவர் செனாடினில் உள்ள தனது வீட்டில் இருந்து பெர்மிஜெயாவிலுள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் என நாங்கள் நம்புகின்றோம்.”

#TamilSchoolmychoice

“இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எங்களது விசாரணைக்கு உதவ முன்வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்”

“அந்த சமிக்ஞை விளக்குப் பகுதி காலை வேளையில் மிகவும் பரபரப்பாக உள்ள பகுதியாகும். எனவே நிச்சயமாக பல மோட்டார் ஓட்டிகள் அச்சம்பவத்தைப் பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது” என்று தனது அறிக்கையில் தேவ் குமார் தெரிவித்துள்ளார்.