Home Featured கலையுலகம் “ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்!

“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்!

824
0
SHARE
Ad

சென்னை – ரஜினி முருகன் படத்தின் மூலம் வசூலிலும், புகழிலும் உச்ச நட்சத்திரமாகிவிட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரெமோ’. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கின்றார் என்பதும் மற்றொரு சிறப்பம்சம்.

நேற்று ‘ரெமோ’ படத்தின் முதல் தோற்றப் புகைப்படங்களும், முன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளன.

remo-sivakarthigeyan

#TamilSchoolmychoice

யார் இது தெரிகிறதா? நம்ம சிவகார்த்திகேயன்தான்! ரெமோ படத்திற்காக அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரம்! பெண் நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் தோன்றுவது படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கின்றது.

remo-teaser-launch

ரெமோ என்ற பெயரையும், கதாபாத்திரத்தையும், தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர் – ‘அந்நியன்’ படத்தின் மூலம்! அவரது கையாலேயே படத்தின் முதல் தோற்றப் புகைப்படங்களையும், படத்தின் முன்னோட்டத்தையும் வெளியிட்டிருக்கின்றனர்.

‘ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் ரெமோவில் இணைகின்றார்.

அனிருத் ரெமோ படத்தின் இசையமைப்பாளர் ஆவார்.

ரெமோ படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: