Home Featured இந்தியா “இந்திய அணியில் மீண்டும் பங்காற்றுவதில் மிகவும் பெருமை” – அனில் கும்பிளே கருத்து!

“இந்திய அணியில் மீண்டும் பங்காற்றுவதில் மிகவும் பெருமை” – அனில் கும்பிளே கருத்து!

645
0
SHARE
Ad

Anil Kumbleபுதுடெல்லி – இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அப்பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய முன்னாள் வீரர்கள் 57 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 21 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்பிளே தேர்வு செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, அடுத்த ஓராண்டுக்கு கும்பிளே இந்திய அணியின் பயிற்சியாளராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து கும்பிளே வெளியிட்டுள்ள கருத்தில், “உங்கள் அனைவரின் அளவற்ற அன்பிற்கும் நன்றி. நெஞ்சைத் தொட்டது. இந்திய அணியில் மீண்டும் பங்காற்றுவதில் மிகவும் பெருமை. இந்தப் பயணம் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்திய அணிக்கு தொடர்ந்து உங்களது ஆதரவை வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.