நியூயார்க் – கடந்த ஜூன் 22-ம் தேதி தொடங்கி, நியூயார்க் நகரிலுள்ள லிங்கான் மைய திரைப்படச் சங்கத்தில் (Film Society of Lincoln Center) நடைபெற்று வரும் நியூயார்க் ஆசிய திரைப்பட விழாவில், மலேசியத் தமிழ்த் திரைப்படமான ‘ஜகாட்’ திரையிடப்பட்டது.
நேற்று ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 7.30 மணிக்கு (மலேசிய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு) ஜகாட் திரையீடு கண்டது.
இத்தகவலை தங்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள நியூயார்க் திரைப்பட விழாவில் ஏற்பாட்டுக் குழு, ‘ஜகாட்’ போன்ற அற்புதமான திரைப்படத்தை இவ்விழாவிற்குக் கொண்டு வந்த சஞ்சய்க்கு நன்றி என அறிவித்துள்ளது.
மேலும், அவ்விழாவில் கலந்து கொண்டு, ஜகாட் திரைப்படத்தைப் பார்த்த திரைத்துறையைச் சார்ந்த பலர், தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.