Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை விசாரிக்க சிறப்பு உயர்மட்ட சென்னை காவல் துறை குழு!

சுவாதி கொலை விசாரிக்க சிறப்பு உயர்மட்ட சென்னை காவல் துறை குழு!

925
0
SHARE
Ad

சென்னை – அகில இந்தியாவையும் உலுக்கியுள்ள இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதியின் கொலை குறித்து விசாரிக்க, சென்னை காவல் துறையில் ஓர் உயர்மட்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Swathi-chennai-girl-murderedஎட்டு இன்ஸ்பெக்டர்கள், ஓர் உதவி துணை ஆணையர் (அசிஸ்டெண்ட் கமிஷனர்), ஒரு துணை ஆணையர் (டெபுடி கமிஷனர்) ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

சுவாதி கொலை குறித்து வதந்திகள் எதையும் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ள, சென்னை காவல் துறையினர், கொலை நடந்ததைப் பார்த்தவர்கள், புகைப்படம் அல்லது காணொளி (வீடியோ) எடுத்திருந்தார் அதனை உடனடியாகத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கொலை சம்பந்தமாக தகவல்கள் வைத்திருப்போர் கீழ்க்காணும் காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:-

கே.ஷங்கர்,  – 8939966985.

எஸ்.மனோகரன் – 9840962359, 9498178179.

பி.பெருமாள் –  9443481933.

கேபிஎஸ்.தேவராஜ் – 9840190505, 9498132707.

பி.கலிதீர்த்தன் – 9751804830, 9498127426.

எஸ்.முத்துவேல்பாண்டி – 9884070878, 9498104839.