Home Featured உலகம் இஸ்தான்புல் பயங்கரம்! இறுதி நிலவரம்! உயிரிழந்தோர் 36 ஆக உயர்வு!

இஸ்தான்புல் பயங்கரம்! இறுதி நிலவரம்! உயிரிழந்தோர் 36 ஆக உயர்வு!

923
0
SHARE
Ad

Istanbul-ataturk airport-bomb attack

  • துருக்கிய நேரப்படி புதன்கிழமை காலை இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.Istanbul-Ataturk airport

இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையம் – கோப்புப் படம்

  • 3 பேர் கொண்ட தற்கொலைப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினர். மூவரும் உயிரிழந்துள்ளனர்.
  • தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பின்னணியில் ஐஎஸ் இயக்கம் இருக்கலாம் என சந்தேகிப்பதாக துருக்கியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • விமான நிலையத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் பீதியோடும், அலறலோடும், காயங்களோடு, விமான நிலையத்தை விட்ட வேகம் வேகமாக ஓடி வெளியேறினர்.
  •  தற்கொலைப் படைத் தாக்குதல்காரன் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதன் பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான் என ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • விமான நிலையத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.