Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை – ராம்குமார் கைது : இறுதி நிலவரம்!

சுவாதி கொலை – ராம்குமார் கைது : இறுதி நிலவரம்!

1020
0
SHARE
Ad

சென்னை – சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம் குமார் குறித்த இறுதி நிலவர செய்திகள் வருமாறு:Suvathi

  • ராம்குமார் மருத்துவமனையில் இருந்தபடி காவல் துறையிடம் வாக்குமூலம் தந்திருக்கின்றார்.
  • அந்த வாக்குமூலத்தின்படி, முகநூல் (பேஸ்புக்) மூலம் சுவாதியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் சுவாதி தனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
  • சுவாதியைக் கொல்லத் தான் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்றும், தன்னைச் சந்தித்தபோது, தனது காதலை மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டியதாகவும் அதனால்தான், தான் ஆத்திரமடைந்ததாகவும் ராம்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
  • தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சுவாதியின் வாயைக் கிழிக்க மட்டும் தான் எண்ணியதாகவும், அதற்காகத்தான் அரிவாளோடு தான் சென்றதாகவும், ஆனால், தவறுதலாக சுவாதியின் கழுத்தைத் தான் வெட்டி விட்டதாகவும் ராம்குமார் வாக்குமூலம் தந்திருப்பதாக தமிழகத் தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.
  • ராம்குமாரை இன்று இரயில் மூலம், சென்னைக்குக் கொண்டுவரவும், தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்தவும், சென்னைக் காவல் துறையினர் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
  • இதற்கிடையில், சுவாதி கொலை விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும், சுவாதி குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளதோடு, ஜாதி, மதம் என்று பார்க்காமல், குற்றம் இழைத்தவன் தண்டனை பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் இந்த விவகாரத்தை அனைத்துத் தரப்புகளும் அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
  • சுவாதியின் கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சுவாதி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பெண்கள் பாதுகாப்புக்காக தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் சுவாதி தனது உயிரைத் தியாகம் செய்தாள் எனத் தாங்கள் கருதுவதாகவும் சுவாதி குடும்பத்தினர் சோகத்துடன் கூறியுள்ளனர்.
  • இதற்கிடையில் சுவாதி மரணமடைந்த பத்தாம் நாள் அபகாரிய சடங்குகளை சுவாதி குடும்பத்தினர் தங்களின் பூர்வீக ஊரான ஸ்ரீரங்கத்தில் நேற்று முதல் நடத்தி வருகின்றனர். 12ஆம் நாள் வரை இந்த சடங்குகள் நீடிக்கும்.