Home Featured நாடு மூன்று மியன்மார் நாட்டவர்கள் வெட்டிக் கொலை – பினாங்கில் பயங்கரம்!

மூன்று மியன்மார் நாட்டவர்கள் வெட்டிக் கொலை – பினாங்கில் பயங்கரம்!

607
0
SHARE
Ad

murder-bukitmertajamபுக்கிட் மெர்த்தாஜாம் – பினாங்கு புக்கிட் மெர்த்தாஜாம், லோரோங் நாகாசாரி என்ற இடத்தில் இன்று காலை மூன்று மியன்மார் நாட்டவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது அப்பகுதியினரை மிகுந்த அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் அவர்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மற்றொரு மியன்மார் நாட்டவர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

அங்கிருந்த வீடு ஒன்றில் இரண்டு சடலங்களும், வீட்டின் முன்பு ஒரு சடலமும் காணப்பட்டுள்ளது.

கடும் காயமடைந்த நான்காவது நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் என மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ ரசாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.