Home Featured தமிழ் நாடு போயஸ் கார்டனுக்கு 16 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல்!

போயஸ் கார்டனுக்கு 16 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல்!

585
0
SHARE
Ad

Poes Gardenசென்னை – தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வசித்து வரும் போயஸ் கார்டனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவனிடம் காவல்துறைத் தற்போது விசாரணை நடத்தி வருகின்றது.

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று 2 முறை மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் போயஸ் கார்டனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அந்தத் தொலைப்பேசி எண்ணை விசாரணை செய்த காவல்துறை, அது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்தது என்றும், 16 வயது சிறுவன் ஒருவன் தான் அதிலிருந்து  பேசியுள்ளான் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.