புதுடில்லி – பிரபல இந்திப்படவுலக நடிகர் ராஜ் பாபர் (படம்) உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிரியங்கா காந்தி பிரச்சாரங்களில் முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ராஜ் பாபரின் நியமனம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், உ.பி.மாநிலத்தில் காங்கிரஸ் வென்றால், ராஜ் பாபர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்த அறிவிப்பை இதுவரை காங்கிரஸ் வெளியிடவில்லை.
Comments