Home Featured நாடு இந்துக்கள் பற்றிய தவறான குறிப்பு: பேராசிரியரை பணிநீக்கம் செய்தது யுடிஎம்!

இந்துக்கள் பற்றிய தவறான குறிப்பு: பேராசிரியரை பணிநீக்கம் செய்தது யுடிஎம்!

880
0
SHARE
Ad

idris-jusoh-300x221கோலாலம்பூர் – மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (யுடிஎம்), இஸ்லாம் நாகரீகம் ஆசிய நாகரீகம் (Tamadun Islam Tamadun Asia) என்ற தலைப்பில், இந்துக்கள் பற்றியும், சீக்கியர்கள் பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜோசுவா (படம்) தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி கல்வியமைச்சரான இட்ரிஸ் ஜோசுவா இன்று காலை பிஎப்எம் என்ற வானொலிக்கு அளித்த பேட்டியில், பல்கலைக்கழகம் அந்தப் பேராசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்கள் (யுடிஎம்) தன்னாட்சி உடையவர்கள். அந்தப் பேராசிரியரை நியமனம் செய்தார்கள். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக நேற்று என்னிடம் தெரிவித்தார்கள்” என்று இட்ரிஸ் ஜோஸ்வா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice