Home Featured நாடு திங்கட்கிழமை முதல் தலைநகரில் கார் நிறுத்த ஒருநாளைக்கு 32 ரிங்கிட்!

திங்கட்கிழமை முதல் தலைநகரில் கார் நிறுத்த ஒருநாளைக்கு 32 ரிங்கிட்!

709
0
SHARE
Ad

KUALA-LUMPUR-khalzuriகோலாலம்பூர் – தலைநகர் மத்திய வர்த்தகப் பகுதியில் (central business district) கார் நிறுத்தும் கட்டணத்தை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்).

இதன் மூலம் இன்று திங்கட்கிழமை முதல் புக்கிட் பிந்தாங், ஸ்ரீ ஹர்தாமாஸ், டேசா ஹர்தாமாஸ், புக்கிட் டாமன்சாரா, சோலாரிஸ் மவுண்ட் கியாரா, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், பங்சார் ஆகிய பகுதிகளில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

வழக்கமாக வாகன நிறுத்தும் கட்டணம் முதல் ஒரு மணி நேரத்திற்கு 80 காசுகள் பெறப்படும். ஆனால் இன்று முதல் அது 2 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் தாண்டிவிட்டால் 3 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆக நாளொன்றுக்கு 32 ரிங்கிட் கட்டணம் கார் நிறுத்துவதற்கு மட்டும் பெறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்தக் கட்டணம் மேலும் 200 சதவிகிதமாகவும் உயரலாம் என்றும் கூறப்படுகின்றது.

மோட்டார் ஓட்டிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு வசூலிக்கப்பட்டு வந்த 50 காசுகள் உயர்ந்து தற்போது 1.50 காசுகள் வசூலிக்கப்படவுள்ளன.

இது குறித்து கோலாலம்பூர் மேயர் மொகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் கூறுகையில், “எனக்குத் தெரியும் (மக்களிடம்) நான் மிகவும் கெட்ட பெயர் வாங்கப் போகிறேன். ஆனால் கோலாலம்பூரில் வாகன நெரிசல் மிகவும் அதிகமாகிவிட்டது அதன் காரணமாகத் தான் இதை செய்ய வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.