பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். “இஸ்லாமியக் கல்விமான்கள் (உலாமாக்கள்), சட்டத்துறை நிபுணர்கள், பொருளாதார மற்றும் இஸ்லாமிய நிதித் துறை வல்லுநர்கள் இந்தக் குழுவில் இடம் பெற வேண்டும்” என்றும் இட்ரிஸ் அகமட் மேலும் கூறியுள்ளார்.
“பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் 1எம்டிபி விவகாரத்தின் உண்மை நிலவரங்களை ஆராயவும் தெரிந்து கொள்ளவும், இத்தகைய அரச விசாரணைக் குழு தேவை” என்றும் பாஸ் கட்சியின் சார்பில் இட்ரிஸ் வலியுறுத்தி உள்ளார்.
Comments