கேரள இளைஞர்களை பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாகிர் நாயக் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவரது சார்பில் செய்யப்படும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
வியாழக்கிழமை நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட குரேஷியை நான்கு நாட்கள் விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள வர்த்தக நகர் மையமான பேலாப்பூரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்யப்பட்ட குரேஷி, மகராஷ்டிரா காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு பின்னர் கேரளா கொண்டு செல்லப்படுவார்.
குரேஷி கைது குறித்து ஜாகிர் நாயக் தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கேரளாவில் சில முஸ்லீம் இளைஞர்களைக் காணவில்லை என்றும் அவர்கள் ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்கு சென்றுவிட்டனர் என்றும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.