Home Featured உலகம் ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தாக்குதல் – 80 ஆக உயர்ந்தது உயிர்ப்பலி!

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தாக்குதல் – 80 ஆக உயர்ந்தது உயிர்ப்பலி!

699
0
SHARE
Ad

kabul-afghanistan-location map

காபூல் – நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடையே நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 231க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஏறத்தாழ 10,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் இரண்டு தற்கொலைத் தாக்குதல்காரர்கள் தங்களின் உடைகளில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தானின் பூர்வீக மக்களான ஹசாராஸ் எனப்படுபவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் ஷியா முஸ்லீம்கள் ஆவர்.

ஆனால், ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியினர் சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தப் பிரிவினைகள் காரணமாகத்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.